வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் கோவிலில் நந்தி எம்பெருமானுக்கு கார்த்திகை மாத சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடந்தது. நந்திக்கு பால், தயிர், நெய் உட்பட 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேக ஆராதனை, சோளீஸ்வரர் மற்றும் நந்திக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.