சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இக்கோயிலில் 5 அடி உயர நந்திசிலைக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு மஞ்சள், திருநீறு, பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். பிரான்மலை திருக்கொடுங்குன்ற நாதர் கோயிலில் பாதாள தளத்தில் உள்ள நந்திதேவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.