கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பகல்ப த்து உற்சவத்தையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் இரு முறை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏதாதசிக்கு முன்பாக நடக்கும் பகல்பத்து உற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து பெருமாள், தேசிகர் புறப்பாடாகி பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருள செய்து, சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. பகல்பத்து உற்சவம் 24ம் தேதி முடிந்து அடுத்த நாள் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று இரவு முதல் ராப்ப த்து உற்சவம் துவங்குகிறது. மேலும், 16ம் தேதி மார்கழி துவங்கியதில் இருந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.