வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 34ம் ஆண்டு மண்டல பூஜை சுப்புராஜ் குருசாமி தலைமையில் நேற்று நடந்தது.
காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு ஐயப்பன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து நடைபெறும் பூஜையில், நாள் தோறும் அபிேஷக பூஜையும், தீபாரதனையும் நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை சுவாமிக்கு கலசபூஜை நடக்கிறது.தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்பசேவா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர்சந்திரன், பொருளாளர் அழகிரி மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.