பதிவு செய்த நாள்
23
டிச
2020
04:12
நாமக்கல்: நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், வரும், 25ல் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு விதிமுறை அமலில் உள்ளதால், அதிகாலையில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை மட்டும், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக, ஒரு மணி நேரத்துக்கு, 1,500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதில், இணைய தளத்தில், முன் பதிவு செய்ய, 750 பேருக்கும், நேரில், 750 பேருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில், இலவச தரிசனத்துக்கான டோக்கன் வினியோகம் நேற்று துவங்கியது. பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டை, மொபைல் போன் எண்ணை காண்பித்து, டோக்கன் பெற்று செல்கின்றனர்.