சிவனின் அருள் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒருமுறை மதுரை மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் உறங்கினார். முனிவரின் கனவில் தோன்றிய சிவன், மதுரையில் தான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களையும் புராணமாக எழுத உத்தரவிட்டார். முனிவரும் அதைச் செய்யுள் வடிவத்தில் எழுதி திருவிளையாடல் புராணம் எனப் பெயரிட்டார். கடவுளின் விளையாட்டு என்பது இதன் பொருள். மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய 63 விளையாடல்களின் தொகுப்பு இது.