கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வைகுண்டத்துக்கு இணையாக பரமபதநாதனின் தலங்கள் விண்ணகரம் என்கிற அடைமொழியோடு 108 திவ்ய தேசங்களில் 6 தலங்கள் கூறப்படுகின்றன.1. திருவண்ணகர்(ஒப்பிலியப்பன் கோயில்). கிழக்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம்.2. திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்). கும்பகோணம் அருகில் உள்ளது. மேற்கே திருமுக மண்டலம். வீற்றிருந்த திருக்கோலம்.3. திருக்காழிச் சீராம விண்ணகரம் (சீர்காழி). கிழக்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம்.4. திரு அரிய மேய விண்ணகரம் (நாங்கூர்). கிழக்கே திருமுக மண்டலம். வீற்றிருந்த திருக்கோலம்.5. திருவைகுந்த விண்ணகரம் (நாங்கூர்). கிழக்கே திருமுக மண்டலம். வீற்றிருந்த திருக்கோலம்.6. திருபரமேச்சுர விண்ணகரம்(காஞ்சி வைகுண்டநாதப் பெருமாள்). மேற்கே திருமுக மண்டலம். வீற்றிருந்த திருக்கோலம்.