* வாய்ப்பு கிடைத்தும் நல்லதைப் பேசாதவன் பயனற்றவன். * உயிருள்ள வரை நினைக்க வேண்டும் என்பதே கடவுளிடம் கேட்க வேண்டிய வரம். * ஐம்புலன்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே மனம் கட்டுப்படும். * நெருப்பு இல்லாமல் சமைக்க முடியாது. ஞானம் இல்லாமல் மோட்சம் கிடையாது. * தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் மனம் துாய்மை பெறும். * கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழுங்கள். * தனிமையில் இனிமை இருக்கிறது. அதை அனுபவியுங்கள். * பிறர் போற்றுதல், துாற்றுதலை பொருட்படுத்த வேண்டாம். * உதட்டின் சிரிப்பை விட உள்ளத்தின் சிரிப்பே அழகானது. * பயனில்லாத ஒரு வார்த்தையைக் கூட பேசாதீர்கள். * கடவுளிடம் மனதை முழுமையாக ஒப்படையுங்கள். * சுயநலத்தை கைவிட்டால் கடவுளை அடைய முடியும். * கடவுளின் திருவடியை சிந்திப்பதே மேலான இன்பம். * மற்றவரை திருத்தும் விதத்தில் உங்களை தகுதிப்படுத்துங்கள். * தியானத்திற்கு நேரமோ, இடமோ தடையல்ல. * ஒளி இல்லாமல் காட்சி தெரியாது. ஆராய்ச்சி இல்லாமல் ஞானம் தோன்றாது. * நான், எனது என்னும் இரண்டும் துன்பத்திற்கு ஆளாக்கும்.