பதிவு செய்த நாள்
30
மே
2012
11:05
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே ஜமீன் கரிசல்குளம் பகளாமுகிதேவி கோயிலில் வரும் 1ம் தேதி மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. விளாத்திகுளம் தாலுகா ஜமீன் கரிசல்குளம் ரெட்டி சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பகளாமுகிதேவி கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மஹாகும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு விழா இன்று காலை 8 மணிக்கு புண்யாகவாசனம், மஹா கணபதி பூஜையுடன் துவங்குகிறது. பின்னர் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கங்கா பூஜை, தீர்த்தக்குடம், சுற்றி வருதல், புண்யாகவாசனம், எஜமானார், ஆச்சாரியன் அழைப்பு, மஹா சங்கல்பம், ம்ருத்ஸங்கிரணம், காப்பு கட்டுதல், கும்ப பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, திருவாராதனம் நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, திருவாராதனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹீதி, தீப பூஜை, கன்னிகாபூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மாசாரி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. 31ம் தேதி காலை 8.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு ஐந்தாம் காலயாக சாலை பூஜை நடக்கிறது. 1ம் தேதி காலை 6 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு பகளாமுகிதேவி, விமானம், சௌபாக்ய விநாயகர், கருப்பசாமி, பைரவர் மற்றும் பலி பீடத்திற்கு மஹாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.