பதிவு செய்த நாள்
30
மே
2012
11:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம், நாளை 31ம் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீசெல்வர் உற்சவமும், நேற்று காலை அங்குõரர்ப்பணம், இரவு ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு நடந்தது. இன்று காலை ஸ்ரீபெருமாள் திருமஞ்சனம், இரவு சிறுபுண்ணியகோடி விமானம் உற்சவம் நடைபெறுகிறது. நாளை காலை 2 மணியிலிருந்து 3.30 மணிக்குள், கொடியேற்றமும், . காலை 3.45 மணிக்கு, தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும், இரவு சிம்ஹ வாகன உற்சவமும் நடைபெறும். நாளை மறுதினம் காலை ஹம்ஸ வாகனம், இரவு சூர்ய பிரபை உற்சவம் நடைபெறும். பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம், 2ம் தேதி காலை 4 மணிக்கு நடக்கிறது. பிரபல உற்சவமான தேரோட்டம் 6ம் தேதி காலை நடைபெறுகிறது. மறு நாள் காலை தொட்டித் திருமஞ்சனம், இரவு குதிரை வாகனம், 8ம் தேதி காலை 4.30 மணிக்கு, ஆள்மேல் பல்லக்கு, காலை 10 மணிக்கு தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 9ம் தேதி காலை த்வாதசாராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம், த்வஜ அவரோஹணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.