விழுப்புரம்,; அன்னியூர் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத ராமநாதீஸ்வர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு வரும் 27ம் தேதி, சிறப்பு யாகம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த அன்னியூர் கிராமத்தில், மிகவும் பழமை வாய்ந்த, திரிபுர சுந்தரி சமேத ராமநாதீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சங்கடம் தீர்க்கும் சனி பகவான் காக்கை வாகனத்தில், வலது காலை உயர்த்தி மடக்கிய நிலையில் சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிலையில் அருள்புரிகிறார்.இவர் வரும் 27ம் தேதி, காலை 5.22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது.இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.