Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்வாழ்த்து ... ராமநாதீஸ்வரர் கோவிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்தையும் கேள்விக்குள்ளாக்கி எல்லை மீறும்..சமூக வலைதள புளுகுப்புலிகள்
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேகத்தையும் கேள்விக்குள்ளாக்கி எல்லை மீறும்..சமூக வலைதள புளுகுப்புலிகள்

பதிவு செய்த நாள்

24 டிச
2020
09:12

தமிழகத்தில் தற்போது எதற்கெடுத்தாலும், என்ன செய்தாலும் குற்றம் கூறியும், குறை சொல்லியும் பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும், சமூக வலைதள புளுகுப்புலிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

எந்தவொரு நற்காரியத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து குறை சொல்வதையே, வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குறுகிய மனத்தார், கோவில்களின் கும்பாபிேஷகத்திலும் குறுக்கிட்டு, திருப்பணிகளுக்கு தொல்லை கொடுக்க துவங்கிவிட்டனர். 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிேஷகம் நடத்தப் பட வேண்டுமென்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப் படவில்லை. நிதி வசூல் செய்வதற்காகவே இதைச் செய்கிறார்கள் எனக்கூறும் சிலர்,

தங்களுக்கு மட்டுமே சாஸ்திரம் தெரியும் என்பது போல வாதிடுகிறார்கள். இவர்களுக்கான பதிலை, இங்கு விரிவாக அளித்திருக்கிறார்கள், தங்கள் வாழ்நாளையே இறைப்பணிக்காக அர்ப்பணித்திருக்கும்

ஆன்மிக பெரியவர்கள்...

12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் ஏன்? பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேட்டி: திருக்கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன் என்று, பேரூர்

ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான பேரூர் ஆதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகள் கூறியதாவது:திருக்கோவில்கள் அருள் நலத்தை வழங்கக்கூடிய பெரும் கருவூலங்கள். கருவூலத்தில் இருந்து தேவையான காலத்தில், தேவையானவற்றை எடுத்துக்கொள்ள முடியும் என்பதை போல, கோவில்களில் இருந்து, அருள்நலம் என்னும்

ஆற்றலை பெற முடியும்.கோவிலில் இருக்கும் கருவறை, இறைவன் திருமேனி, கீழாக பதிய வைத்துள்ள எந்திரங்கள், கோபுர கலசங்கள், சுற்றி அமைக்கப்படும் எண் வகை மருந்துகள் மூலமாக நமக்கு அருள் நலம் கிடைக்கிறது.இறைவன் திருமேனி, இறையருளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் மேலே இருக்கும் கலசம், உள்ளே இருக்கும் எந்திரம் துணை புரிந்து, கோவிலில் ஒரு ஆற்றல் உருவாகிறது. கோவிலை நாம் வலம் வரும்போது, நம்மை அறியாமல் சக்தி நம் உடலில் ஊட்டப் பெறுகிறது. உயிருக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் அளிக்கும் சக்தியை நாம் பெறுகிறோம்.கோவில்களில் நாள் வழிபாடு, வார வழிபாடு நடத்தும்போது, இந்த சக்தியை நாம் பெறுவோம். இவ்வாறு நாம் பெறும்போது, கருவூலத்தில் பொருள் குறைவது போல், கோவில்களில் அருள் ஆற்றல் குறையும். அது குறையாமல் இருப்பதற்குத்தான் நாளும் ஆறு கால வழிபாடு செய்கிறோம்;

இறைவன் திரு மேனியை நன்னீராட்டுவது, மலர்களை கொண்டு அழகு செய்வது, மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வது எல்லாம், அருள் ஆற்றல் அதிகரிக்கவே செய்யப்படுகின்றன.இப்படி நாள் வழிபாட்டின் மூலம் கிடைக்கும் அருள் ஆற்றல் சற்று குறைவாக இருக்குமெனில், சிறப்பு வழிபாடுகள், வார வழிபாடுகள் நடத்தப்படும். அதன் மூலமும் மக்களுக்கு ஆற்றல் கிடைக்கும். அது மட்டுமின்றி, சஷ்டி, ஏகாதசி, பவுர்ணமி என பிறைகளின் நிலைப்பாட்டுக்கு ஏற்ற படியும் வழிபாடு செய்வர். இதன் மூலமும் சக்தி கிடைக்கும். அந்தந்த நட்சத்திரத்துக்கு தகுந்தபடி வழிபாடு, மாதப்பிறப்பு, உத்தராயனம், தட்சினாயனம் வழிபாடுகளின் மூலமும் ஆற்றல் குறைபாடுகள் சரி செய்யப்படும்.இதன்

மூலமாகவும் குறை நீங்காமல் இருந்தால் கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெருந்திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த விழாவின் மூலமும் திருக்கோவிலில் ஆற்றல் சேமிக்கப்படும். எனினும், 12 ஆண்டுக்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.நாள் வழிபாட்டில் முடியாதது, வார வழிபாட்டில் நிறைவேறும். வார வழிபாட்டில் நிறைவேறாதது, மாத வழிபாடு, பட்ச வழிபாடு மூலம் நிறைவேறும்.இவற்றின் மூலமும் கிடைக்காதது, ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பெருந்திருவிழாவில் கிடைக்கும்.

இதன் மூலமாகவும் கிடைக்காதபோது தான், தனியாக யாக சாலை அமைத்து, நான்கு காலம், ஆறு காலம்,எட்டு காலம் என்ற அடிப்படையில் வேள்விக்குண்டம் அமைத்து, நிறைமொழி மாந்தர்களின் மந்திரங்களை சொல்லி, அங்கே பகவானை நெருப்பு வடிவத்தில் எழுந்தருளச் செய்வர்.எத்தனை குண்டம் போடப்படுகிறதோ, அத்தனை குண்டத்தில் இருந்தும் சக்தியை எடுத்து கலசத்தில் சேமிப்போம்.

இப்படி செய்யும்போது, கலசத்தில் ஆற்றல் நிறைவாக இருக்கும்.கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை திருக்குட நன்னீராட்டு செய்வது ஏன் என்பதற்கும் நெறிமுறை உள்ளது. கோள்கள் 9 உள்ளன. இதில், குரு எனப்படும் வியாழனின் ஆற்றல், மூளையோடும் சிந்தனை வளர்ச்சியோடும், ஞானத்தோடும் தொடர்புடையது.அனைத்து கோள்களும் சூரியனை வலம் வருகின்றன. குரு, சூரியனை வலம்

வருவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 ஆண்டு. ஒரு குறிப்பிட்ட ராசியில் இருக்கும் குரு, இடப்பெயர்ச்சியாகி மீண்டும் அதே ராசிக்கு வரும்போது மறு திருக்குட நன்னீராட்டு நடத்தப்பட வேண்டும் என்பது முன்னோர் காட்டிய வழி. அந்த அடிப்படையில் தான், 12 ஆண்டுக்கு ஒரு முறை கோவில்களில் திருக்குட நன்னீராட்டு நடத்தப்பெறுகிறது. குடமுழுக்கு செய்வதற்கு முந்தைய நாள் எண் வகை

மருந்து சாற்றுவர். இது, சிலையையும், பீடத்தையும் பிடிப்பதற்கான ஆற்றல். குறிப்பிட்ட காலத்தில் அந்த மருந்து ஆற்றலை இழந்து விடும். எனவே, புதிய மருந்து சாற்றுவது வழக்கம்.இவ்வாறு செய்யும்போது கோவிலில் இருக்கும் ஆற்றல் புத்தாக்கம் பெறுகிறது.நன்னீராட்டு செய்யும்போது, குடத்தில் இருக்கும் சக்தியை மீண்டும் சிலைகளுக்கு அளிப்பர். அப்போது அந்த மூர்த்திமீண்டும்  அருட்பொலிவோடு விளங்குவார்.எனவே தான் முன்னோர், திருக்குட நன்னீராட்டு விழா நடத்துவதை மரபாக வைத்துள்ளனர்.

அதற்கான கால அளவு, 12 ஆண்டு என்பது, சூரியனை குரு சுற்றி வரக் கூடிய கால அளவை வைத்து சொல்லியிருக்கின்றனர்.திருக்குட நன்னீராட்டு செய்வதன் நோக்கம், கோவிலில் சக்தியை பெருக்குவது.

இந்த விழா, உரிய காலத்தில் நடக்கும்போது, நிறைவான அருள் ஆற்றல் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பாக இருக்கிறது.இவ்வாறு சாந்தலிங்க மருதாசல அடிகள் கூறினார்.

குடமுழுக்கு இல்லையெனில் குடியிருப்பாரா இறைவன்? சிவாகம பேராசிரியர் ஏவி சுவாமிநாத சிவாச்சாரியார் முதல்வர், சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை, மயிலாடுதுறை

கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 12 ஆண்டுக்கு மேற்பட்ட பராமரிப்பு இல்லாத பாழடைந்த கோவில்களில் இறைவன் இருக்கமாட்டார்; கோவிலை விட்டு வெளியேறி, தலவிருட்சத்தில் ஓராண்டு காலம் காத்திருப்பார். அப்போதும் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை எனில் அதன் பின்னர் சூரிய மண்டலத்தில் அமர்ந்து கோவிலை கண்காணித்து வருவார். இறைவனுடன், பரிவார தெய்வங்களும் சூரியமண்டலத்தில் அமர்ந்து யாரேனும் குடமுழுக்கு செய்ய வருகிறார்களா என கண்காணிப்பர். அதன் பிறகும் குடமுழுக்கு செய்யவில்லை எனில் தெய்வ சாபம் ஏற்படும்.இதனால் நாட்டை ஆள்பவர் முதல் மக்கள் வரை

அனைவரும் பாதிக்கப்படுவர். தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை பேரிடர், பேரழிவு நோய்கள் என துன்பங்கள் வரும். பக்தர்களால் பழைய கோவில் கட்டுமானம் திடீரென புதுப்பிக்கப்பட்டாலும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும், 12 ஆண்டுக்கு முன்னதாகவே கும்பாபிஷேகம் செய்யலாம் எனவும் ஆகமங்கள் கூறுகின்றன.


விவசாயம் செழிக்கும்! குருமூர்த்தி குருக்கள், தஞ்சாவூர் பெரியகோவில். அவரது கருத்து:


கும்பாபிஷேகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவது என்பது சிறப்பு மிக்க ஒன்றாகும். ராசி, லக்னம் 12 என்பது போல, 12 ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் கும்ப ராசியில் வருவதால் மகாமகம், கும்ப மேளா கொண்டாடப்படுகிறது.அதே போல் 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தினால், உலகத்தில் உள்ள அனைவரும் சகல நன்மைகள் பெற்றும், இயற்கை சீற்றங்களில் இருந்து

விடுபட்டும்,நோய்கள் இன்றியும், விவசாயம் பெருகியும், வாழ்வார்கள்.சுவாமி சிலைகளுக்கு தொடர்ந்து பால், மஞ்சள் போன்ற மங்கல பொருட்களால் செய்யப்படும் அபிஷேக நீரானது சிலைகளின் ஓரங்களில் சென்று, சிலையின் தன்மையை மாற்றி விடும். இதனால் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டு, அதில் இருந்து அழுக்கு நீக்கப்படுகிறது. அதன் மூலம் சுவாமிக்கு சக்தி ஏற்றப்படுகிறது.

கும்பாபிஷேக தினத்தன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால், முப்பத்து முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும்.

கலைகளை காப்பாற்ற கும்பாபிஷேகம் அவசியம்! ராஜா சிவாச்சாரியார் : சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம்

கும்பாபிஷேகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டுமென்ற மரபின் அடிப்படையிலேயே கோயில்களில் செய்து கொண்டிருக்கிறோம். சிலைகளில் வைக்கும் அஷ்டபந்தன மருந்தின் தன்மையானது 12 ஆண்டு வரைதான் இருக்கும் என்று சான்றுகள் உள்ளன.ராஜகோபுர விமானங்களின் சுதைகளை செப்பனிட்டு வர்ணம் பூசுவது, கோயில் மண்டபங்களில் மராமத்து பணி, கருவறையில் மராமத்து பணி ஆகியவற்றை 12 ஆண்டுக்கு ஒருமுறை அவசியம் செய்து, கும்பாபிஷேகம் செய்தால், கோயிலின் தன்மை மாறாமல் இருக்கும். அவ்வாறு செய்யாத பல கோயில்கள் சிதிலமடைந்து தரை மட்டமாகிக்

கொண்டிருக்கின்றன. கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என ஆகம சாஸ்திரம் ஒரு புறம் இருக்கிறது, இல்லை என்பது ஒரு புறம் சர்ச்சையாக இருந்தாலும் மரபின் அடிப்படையில், திருக்கோயில்களின் நலன் கருதியும், உலக நலன் கருதியும் அவசியம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.கலைகளை காப்பாற்றவும், மரபை காப்பாற்றவும், உலக நலன் கருதியும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் கட்டாயம் செய்ய வேண்டும்.

மூன்று ஜென்ம பாவம் போக்கும் கும்பாபிஷேகம் : நி.த.நடராஜ தீட்சிதர் -சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி மற்றும் பூஜகர்

கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ததில் இருந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது இந்து சமய ஆகம விதி. அப்போது தான் அந்த கோவிலில் தெய்வீக சக்தியானது நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்பது தெய்வத்திற்கு மட்டும் பொலிவு என்பது அல்லாமல் அங்கே வரக்கூடிய அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்வு மேலோங்கக் காரணமாகவும் அமைகிறது.ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது. வியாழன் கோளின் பார்வை சுப நிகழ்வுகளுக்கு முக்கியம் என்று ஜோதிடக்குறிப்புகள் கூறுகின்றன.

அவ்வகையில், ஒரு முறை குடமுழுக்கு செய்யும் போது எந்த ராசி மண்டலத்தில் குரு பகவான் இருந்தாரோ, அதே போல் மறுமுறை அதே ராசிக்கு வருவதற்கு 12 ஆண்டு ஆகும். ஆகவே பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு அவசியம் நடத்திட வேண்டும்.கோயில் என்பது எந்தவிதமான சேதமும் இல்லாமல் எப்பொழுதும் முழுமையாக அமையவேண்டும். ஒரு வேளை, தெய்வச் சிலைகளில் பின்னங்கள் ஏற்பட்டாலோ அல்லது புயல், வெள்ளம் போன்ற காலங்களில் கோயிலின் பகுதிகள் சேதங்கள் ஏற்பட்டாலோ, பன்னிரண்டு ஆண்டு வரை காத்திருக்காமல், உடனடியாக, குறைகளை நீக்கி, குடமுழுக்கு செய்யலாம் என்று தெளிவாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோயில்களில் ஏன் திருப்பணி: சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேட்டி: திருக்கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒரு முறை திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது,

பல்வேறுகாரணங்களுக்காக, முன்னோர் வகுத்த மரபாக உள்ளது, என்று, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தார்.கோவையில் அமைந்துள்ளது சிரவணபுரம் கவுமார மடாலயம். ராமானந்த சுவாமிகளால் துவங்கப்பட்ட இந்த மடாலயத்தின் தலைவராகவும், சிரவை ஆதீனமாகவும் இருப்பவர் குமரகுருபர சுவாமிகள். அவர் கூறியதாவது:தஞ்சை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்கள் நம் கட்டட

கலைகளுக்கு சிறப்புடையதாக போற்றப்படுகின்றன. திருக்கோவில்களில் பல ஆண்டு உழைப்பின் மூலம் தமிழர் வரலாறுகளை சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். அப்படிப்பட்ட கலைக்களஞ்சியங்களான திருக்கோவில்களை 12 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது நம் மரபாக இருந்து வருகிறது. கோவில்களை புதுப்பித்து வண்ணம் தீட்டி வடிவு காட்டி, திருக்குட நன்னீராட்டு செய்வது, முன்னோர் ஏற்படுத்தியுள்ள மரபு. ஏன் திருப்பணி செய்ய வேண்டும், திருக்குட நன்னீராட்டு செய்ய வேண்டும் என்று பலருக்கு ஐயம் ஏற்படுவது உண்டு.முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கலைச்செல்வங்களை உரிய முறையில் பாதுகாத்து, எதிர்கால சந்ததிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனில் அவற்றை

புதுப்பிக்க வேண்டும். ஆண்டு தோறும், தைப்பொங்கலை முன்னிட்டு இல்லம்தோறும் துாய்மைப்படுத்துகின்றனர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது அது தான்.

திருக்கோவில்களை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க முடியாது. எனவே, 12 ஆண்டுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. 12 என்கிற எண்ணுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதங்கள் 12, திருமுறைகள் 12, ராசிகள் 12, மகாமகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை, கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒரு முறை, குறிஞ்சி மலர்வது 12 ஆண்டுக்கு ஒரு முறை என்கிற வகையில், திருக்கோவில்கள், 12 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.கருவறைக்கு மேலே இருக்கும் விமானம். நுழைவாயிலுக்கு மேலே இருக்கும் ராஜகோபுரம் ஆகியவற்றில், தமிழர் வரலாறு, வாழ்க்கை முறை, கலைநுட்பத்தை காட்டும் சிற்பங்களை முன்னோர் அமைத்துள்ளனர். அவை காலத்தால் சிதைந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. பல கோவில்கள் உரிய காலத்தில் புதுப்பிக்காத காரணத்தால் சிதைந்து போவதை காணவும் முடிகிறது.இயற்கை சீற்றம் காரணமாகவும், பறவைகளின் எச்சம் காரணமாக செடி முளைத்தும், கோவில் கோபுரங்கள் சிதைந்து போவதை பார்க்கிறோம். உரிய காலத்தில் கோவிலை புதுப்பிக்கவில்லை என்றால் முன்னோர் உழைப்பும், கலைகளும் அழிந்து போகும்.இத்தகைய கலைச்செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை, அக்காலத்திலேயே முன்னோர் சிந்தித்துள்ளனர் என்பதற்கு தென்காசி கோவிலில் இருக்கும் கல்வெட்டு சான்றாக உள்ளது.இந்த

கோவிலின் ஒரு கல் கீழே விழுந்தாலும், அதை புதுப்பிப்பவர் காலில் நான் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து அவரது திருவடியை தாங்குவேன் என்று, திருப்பணி செய்த அரசர் வெட்டிய கல்வெட்டு தெரிவிக்கிறது.அது மட்டுமின்றி, கோவில் திருப்பணியின் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிற்பக் கலைஞர்கள், வர்ணம் தீட்டுவோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலைவாய்ப்பு இல்லையெனில் அந்த கலையே அழிந்து விடும்.

தமிழின் சிறந்த ஆகம நுாலாக கருதப்படும் திருமந்திரம், கோவில்களில் வழிபாடு குறைந்தால், அதில் குற்றம் குறை ஏற்பட்டால், அது மக்களை பாதிக்கும். அரசனுக்கும் துன்பம் வரும். நாடும் வளம் குன்றும். திருட்டு அதிகரிக்கும் என்கிறது.முன்னவனார் கோவில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்கன்னம் களவு மிகுந்திடும் காசினிஎன்னருள் நந்தி எடுத்துரைத்தானே(திருமந்திரம் 518) எனவே கோவில்களில் தடையற்ற வழிபாடு நடக்க வேண்டும் என்கிறது திருமந்திரம்.திருக்கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது திருப்பணி செய்து, திருக்குட நன்னீராட்டு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாகவும் செய்யலாம். கோவில் கோபுரங்களில் இடி விழுதல் போன்ற ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு முன்னதாகவே கூட திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு செய்வது மரபாக இருக்கிறது. இதை முன்னோர் சொல்லியிருக்கின்றனர். செய்தும் இருக்கின்றனர். கோவில்களுக்கு ஏற்ப வழிபாடுகள் முறையாக செய்ய வேண்டும். வழிபாடுகள் குறையும்போது நோய் மிகுந்து மக்கள் துன்பப்படுவர். மன்னர்களின் வலிமையும் குறையும் என்கிறது இன்னொரு திருமந்திர பாடல்.பல கோவில் கோபுரங்களில், மரங்கள் முளைத்து சிற்பங்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றி பக்தர்கள் அனைவரும், அரசுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கோவில்களை புதுப்பிக்க வேண்டும். அதிகாரிகளை நியமித்து காணாமல் போன கோவில் சிலைகளை தேடுகிறோம். அழிந்து கொண்டிருக்கிற கோவில்களை புதுப்பிக்க தனியாக ஆணையமே அமைக்கலாம். தமிழகத்தில் மட்டும் அரசு சார்ந்தவை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அரசு சாராதவை ஏராளம் உள்ளன. அவற்றை புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும். ஒரு முயற்சி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு அனுமதி பெற்று முறையாக திருப்பணி செய்யவும், திருக்குட நன்னீராட்டு செய்யவும், பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு குமரகுருபர சுவாமிகள் கூறினார்.

நாட்டுக்கு நன்மை: சுவாமிநாத சிவாச்சாரியார், வடபழநியாண்டவர் திருக்கோயில் , சென்னை.

குவிலென்சை ஓரிடத்தில் குவியச்செய்தால் எப்படி சக்தி அதிகரிக்குமோ அது போலத்தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ள சக்தியை குவியச்செய்யும் இடம்தான் கோவில் கருவறை, இந்த கருவறையில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு அதீத சக்தி கொடுப்பது அவரது அஷ்டபந்தனம்தான். கொம்பரக்கு,சுக்கான், குங்குலியம், செம்பஞ்சு, வெண்ணெய், ஜாதிலிங்கம், மஞ்சள்மெழுகு, செந்துாரம் போன்ற எட்டுவிதமான பொருட்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுவதுதான் அஷ்டபந்தனம்.இந்த அஷ்டபந்தன மூலிகை கலவைக்கு மிகுந்த சக்தி உண்டு. இந்த சக்தி இறைவனுக்கு செலுத்தப்பட்டு பின் அது

இறைசக்தியாகி எதிரே நிற்கும் பக்தர்களுக்கு வந்து சேருகிறது. ஆகவே அஷ்டபந்தனத்தின் சக்தியை பனிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவது கோவிலுக்கும் பக்தர்களுக்கும் நாட்டுக்கும் நன்மைதரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்; சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ( ஆருத்ரா தரிசனம் ) ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், பேரூர் ஆதினம் ராமசாமி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
சென்னை; நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூலவர் விமானத்திற்கு செப்பு தகடு வேய்ந்து, தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar