நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2020 05:12
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் பெருமாளை வழிபட்டனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் மார்கழி மாத பகல்பத்து. இராப்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் நித்திய கல்யாண பெருமாள் சிறப்பு அபிஷேகம்.தீபாராதனை நடக்கும். தினந்தோறும் மாலை கோவில் உட்பிரகாரம் சாமி புறப்பாடு நடந்தது. பகல்பத்து உற்சவம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.இறுதி நாளான அன்று பெருமாள் மோகனா அவதாரத்தில் அருள்பாலித்தார். நேற்று இராப்பத்து உற்சவம் துவங்கியது.முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.அதிகாலையில் நித்திய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு கோவிலில் பரமபதவாசல் வழியாக அம்பாளுடன் நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளினார்.பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம்மிட்டு பெருமாளை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் பெருமாளை வழிபட்டனர்.மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி. ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது.