திருப்பதி: திருமலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு மத்தியில் மாட வீதியில் நடந்த தங்க ரத உலா நடைபெற்றது. இந்த தங்க ரதத்தை முழுக்க முழுக்க பெண் பக்தர்களே இழுத்துச் சென்றனர். கொரோனா காரணமாக மாட வீதிகளில் பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை. சுவாமி வாகனங்களும் வலம் வரவில்லை எல்லா விழாக்களும் கோவிலுக்கு உ்ள்ளேயே நடந்தது. இந்த நிலையில் வைகுண்ப ஏகாதேசியை முன்னிட்டு முதல் நாளான இன்று காலை 11 மணியளில் தங்க ரத உலா மாட வீதிகளில் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதேசிக்கு வந்திருந்த ஏாராளமாக பக்தர்கள் தங்க ரதத்தையும் ரதத்துனுள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் வீற்றிருந்த பெருமாளையும் தரிசித்து மகிழ்நதனர். இந்த தங்க ரதத்தை பெண்கள்தான் இழுக்க வேண்டும் என்பதால் பெண் பக்தர்களும் தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் பெண்களும் சேர்ந்து இழுத்தனர். தங்க ரதம் முழுமையாக சுற்றிவரும் வரை திருமலை எங்கும் கோவிந்தா கோவிந்தா கோஷம் ஒலி பெருக்கிகள் மூலம் ஒலித்துக் கொண்டிருந்தது.