சின்னமனுார்:தேனி மாவட்டம் குச்சனுார் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளிய கோயிலில் சனிபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சின்னமனுார் : குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் மூலவர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். பரிகாரம் செய்ய வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வாரத்தின் சனிக்கிழமைகளில் ஏராளமானோர் வருவர். இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா குறித்த ஆலோசனை கூட்டம் போடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் நடந்தது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பாதை குறுகலாக இருப்பதால் சீலையம்பட்டியிலிருந்து குச்சனுாருக்கு பாலம் வழியாக வர தடை விதித்தல். முல்லைப்பெரியாற்றில் அதிக தண்ணீர் வருவதால் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.