பதிவு செய்த நாள்
27
டிச
2020
09:12
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது.டிச.17 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. உற்ஸவர் வல்லபை ஐயப்பனை கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளம் கொண்டு சென்று சரணகோஷம் முழங்க, தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு நடந்தது.வல்லபை விநாயகர், மஞ்ச மாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் காணப்பட்டனர். சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. பேட்டை துள்ளல் நடைபெறவில்லை. முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலையஅறக்கட்டளையினர் செய்திருந்தனர்.கடலாடி: கடலாடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்புறமுள்ள சபரித்தோட்டம்ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் விளக்கு பூஜை,படி பூஜை உள்ளிட்டவைகளுடன் அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை குருநாதர்கருப்பையா, சற்குருநாதர் மகேந்திர பாண்டியன் செய்திருந்திருந்தனர்.திருவாடானை: திருவாடானை, சின்னக்கீரமங்கலத்தில் உள்ள ஹிந்து கடவுள் ஐயப்பன் கோயில்களில் நேற்று மண்டல பூஜை நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பரமக்குடி: பரமக்குடி ஐயப்பன் கோயில்கள் மற்றும் பொதுஇடங்களில் மண்டல பூஜை விழா, அன்னதானம் நடந்தது. ஐந்துமுனை அருகில்உள்ள ஐயப்பன் கோயிலில், நடந்த மண்டலபூஜை விழாவையொட்டி, நேற்று காலை 9:00மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டன.
பக்தர்கள் பால்குடங்களைசுமந்து பஜார், ஆர்ச் வழியாக கோயிலை அடைந்தனர். அங்குசிறப்பு அபிேஷகம் நடந்தது.பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன்கோயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, 108சங்காபிேஷகம் நடந்தது. மேலும் கருப்பண்ண சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் வீதிவலம்வந்தார். எமனேஸ்வரம் ஐயப்பன் கோயில் உட்பட பல்வேறு இடங்களில்பஜனைக்குப் பின், அன்னதானம் வழங்கப்பட்டது.-
ராமநாதபுரம்: ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த டிச.,16 முதல் ஜன.,18 வரை மண்டல மகர பூஜை விழா நடைபெறுகிறது. விழாவில் திருவிளக்குவழிபாடு, பஜனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, பஜனை நடந்தது. தொடர்ந்து கேணிக்கரை வேல்மருத்துவமனை டாக்டர் மலையரசு அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.