பக்கத்து நாட்டில் கோழி முட்டை விற்கக் கூடாது என சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையறிந்த முல்லா முட்டை விற்க கூடையைச் சுமந்தபடி அங்கு புறப்பட்டார். ‘‘கூடைக்குள் என்ன இருக்கிறது?’’ எனக் கேட்டனர் காவலர்கள். ‘‘கோழிக்குஞ்சு’’ என்றார் முல்லா. ‘‘எதை கொண்டு சென்றாலும் சோதனைக்கு பின்னரே அனுமதிப்போம்’’ என்றனர். ‘‘அவசரமாகச் செல்லும் என்னை அனுமதியுங்கள். கூடையில் கோழிக்குஞ்சு தான் உள்ளது’’ என்றார் முல்லா. ஆனால் முட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ‘‘ஏன் பொய் சொல்கிறாய்’’ என கோபித்தனர். ‘‘முட்டாளாக இருக்கிறீர்களே... சரி முட்டைக்குள் என்ன இருக்கிறது?’’ கேட்டார் முல்லா. இருவரும் புரியாமல் விழித்தனர். ‘‘கோழிக்குஞ்சு எதிலிருந்து வரும்?’’ எனக் கேட்டார் முல்லா. ‘‘முட்டையில் இருந்து வரும்’’ என்றனர். ‘‘அப்படியானால் முட்டைக்குள் கோழிக்குஞ்சு இருப்பது உண்மை தானே. சட்டப்படி இது குற்றமல்ல என்று சொல்லி நடந்தார். இப்படி முட்டை மூலம் சட்டத்தை தகர்த்தவர் முல்லா தான்.