அரசுக்குரிய வரி கட்டாமல் ஏமாற்றுவோரை பைபிள் கண்டிக்கிறது. ‘‘ எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்கு தீர்வை செலுத்த வேண்டியதோ அவனுக்கு தீர்வையையும் செலுத்துங்கள். எவனுக்கு பயப்பட வேண்டியதோ அவனுக்கு பயப்படுங்கள். எவனைக் கனம் பண்ண வேண்டியதோ அவனைக் கனம் பண்ணுங்கள்’’ என்கிறது. எனவே வரியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும். வரியால் நாம் பயனடைவதில்லையே! ஊழல் தானே நடக்கிறது என எண்ணம் வரலாம். அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ‘‘அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்’’ என்கிறது பைபிள். ஆட்சியில் இருப்பவர் நல்லவரோ, கெட்டவரோ.. அது ஆண்டவரின் இஷ்டப்படியே நடந்துள்ளது. தவறு செய்தால் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே அதைப் பற்றி சிந்திக்காமல் கடமையைச் சரிவர செய்வோம்.