ராமாயண காலத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் மூலவர் சிலை அயோத்தியில் இருந்தது. ராமர் மற்றும் அவரது முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டவர் இவர். இலங்கையில் இருந்து சீதையை மீட்க உதவியவர்களுக்கு ராமன் தன் பட்டாபிேஷக விழாவில் பரிசுகள் வழங்கினார். அவர்களில் ஒருவரான ராவணனின் தம்பி விபீஷணனிடம், ‘‘என்ன பரிசு வேண்டும்’’ எனக் கேட்டார் ராமர். ‘‘அயோத்தில் இருக்கும் ரங்கநாதர் சிலையை எடுத்துச் செல்ல விரும்புகிறேன்’’ என்றான் விபீஷணன். மறுக்காமல் ராமர் கொடுத்தனுப்பினார். வழியில் காவிரி நதியைக் கண்டதும், விபீஷணனுக்கு நீராடும் ஆசை ஏற்பட்டது. ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டு கிளம்பினான். நீராடி விட்டு கிளம்பும் போது சிலையை எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. அந்த இடத்திலேயே ஸ்ரீரங்கம் கோயில் உருவானது. தர்மவர்மன் என்னும் சோழ மன்னர் இக்கோயிலைக் கட்டினார். .