கிராமங்களில் ‘ஏகாதசி கள்ளி ஏறுடி ரதத்திலே’ என்றொரு சுலவடை உண்டு. ஒரு கிராமத்தில் கோழி திருடும் கெட்டிக்காரி இருந்தாள். மார்கழி மாதத்தில் ஒருநாள் இரவில் கோழி திருடிய அவள் பொழுது புலரும் முன்பே கறியைச் சமைத்து சாப்பிட்டாள். வயதாகி அவள் இறக்கும் காலம் வந்தது. அவள் முன் தோன்றிய விஷ்ணு துாதர்கள், “ஏகாதசி கள்ளி(திருடி) ஏறுடி ரதத்திலே” என்று சொல்லி வைகுண்டம் அழைத்தனர். மகாபாவியான தனக்கு, பெருமாளின் அருள் கிடைத்தது எப்படி எனத் தெரியாமல் விழித்தாள். திருடிப் பிழைத்தாலும், மார்கழி ஏகாதசியன்று விழித்திருந்த புண்ணியத்தால் நற்கதி கிடைத்தது என்று துாதர்கள் தெரிவித்தனர். ஏகாதசியின் மகிமை அறிந்த அவள் மகாவிஷ்ணுவின் கருணையை எண்ணி கண்ணீர் சிந்தினாள்.