பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகிலுள்ள தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது. இக்கோயிலின் டிச. 25 அன்று புஷ்கலா தேவி, தர்மசாஸ்தா திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். இதேபோல் ஐந்து முனை ரோடு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து, மாலை 6:00 மணிக்கு ஐயன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.