சனி பகவான் நேற்று காலை 5.22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்தார். அதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செத்தவரை – நல்லாண்பிள்ளை பெற்றாள் ஸ்ரீசிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீயோக சர்வேஸ்வர சனி பகவான் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நடந்தது. முன்னதாக, 26ம் தேதி மாலை சிறப்பு ஹோமம், தம்பதியர் சங்கல்பம் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். 5.22 ம ணிக்கு ஸ்ரீசிவஜோதி மோன சித்தர் தலைமையில், மகா தீபாராதனை நடந்தது. அனைத்து ரா சிதாரர்களுக்கு பலன் சேர்க்கவும், பரிகாரம் செய்யவும் சிறப்பு ஹோமம் நடந்தது. ஸ்ரீ சிவஜோதி மோனசித்தர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.