பதிவு செய்த நாள்
28
டிச
2020
09:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள, அண்ணாமலையார் மலையை சிவனாக பாவித்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. வரும், 29ல் காலை, 8:30 மணி முதல், 30ல், காலை, 8:38 மணி வரை, மார்கழி மாத பவுர்ணமி திதி உள்ளது. அந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ?கொரோனா ஊரடங்கு, வரும், 31 நள்ளிரவு, 12:00 மணி வரை உள்ளது. இதனால், வரும், 29 மற்றும் 30ல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில். 10வது மாதமாக, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.