தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தில், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிகார பூஜை செய்யவும் நவபாஷாணத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நவபாஷாணம் பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட பின்பும், இங்கு ஒரு சில பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் நிலை இருந்து வந்தது.கடந்த சில நாட்களாக நவபாஷாணத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுடன், கடலுக்குள் உள்ள நவகிரகங்களை சுற்றிவந்து தரிசனம் செய்து வருகின்றனர்.