பதிவு செய்த நாள்
29
டிச
2020
06:12
கடலுார் : கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா, கடந்த, 21ல் துவங்கியது.
இன்று தேரோட்டமும், நாளை ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இந்நிலையில், தரிசன விழாவில் பங்கேற்பவர்கள் ஆன்லைனில் பதிந்து, அனுமதி சீட்டு பெற வேண்டும் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நேற்று உத்தரவிட்டுள்ளார்.ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்க, http://aruthraonline.com என்ற இணையத்தில் பதிந்து, அனுமதி சீட்டு பெற வேண்டும். ஒரு அனுமதி சீட்டுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவித்து உள்ளார். ஆன்லைன் பதிவு அறிவிப்பை ரத்து செய்ய கோரி, தீட்சிதர்கள், பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் என, 300க்கும் மேற்பட்டோர், சிதம்பரம் கீழவீதியில், நேற்று மாலை, 6:45 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.