பதிவு செய்த நாள்
30
டிச
2020
05:12
தமிழ் இசை சங்கம், தன், 78ம் ஆண்டின் இசை விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த முறை, இந்த சபாவும் இணையவழி மூலமாக, ரசிகர்களுக்கு கச்சேரிகளை கொண்டு சேர்க்கும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. வழக்கமான கச்சேரிகளையே, இங்கும், மறுபடியும் விமர்சனத்திற்கு உட்படுத்தாமல், நம் கவனத்தை சற்று மாற்றி, சங்கம் நடத்தும் திருமுறை இசை நிகழ்வுகளை பற்றிக் காண்போம்.இங்கு, இரண்டாவது நாளன்று, முதல் நிகழ்வாக பண் இசைப் பேரறிஞர் குமாரசுவாமிநாத ஓதுவாரின் திருமுறை இசை அளிக்கப்பட்டது. மேலகாவேரி தியாகராஜன் வயலின், திருவண்ணாமலை டி.எம்.சிவகுமார் மிருதங்கம், குமாரசாமிநாத தேசிகர் பாடிய பாடல்களும், அவற்றிற்கான திருத்தலங்களும், ராகங்களும், நிகர் பண்களும், அவற்றை அருளியவர்களும் கீழுள்ள பட்டியலின் வரிசைப்படி பாடப்பட்டன.வரிசை எண் பாடல் பண்/ராகம் தலம் அருளாளர்1 பாடகமெல்லடி நட்டபாடை/நாட்டை திருநள்ளாறு/திருஆலவரம் ஞானசம்பந்தர்2 நடைமறுதிரிபுரம் சவுராஷ்ட்ரம்/வியாழக்குறிஞ்சி இடைமருதூர் ஞானசம்பந்தர்3 பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை பூர்விகல்யாணி விருத்தம் கடம்பன் துறை அப்பர்4 அரியன் தமிழோடு இசையானவன் பூர்விகல்யாணி கடம்பன் துறை அப்பர்5 கரவின்றி நன்மா காம்போதி தக்கராகப் பண் மயிலாடுதுறை ஞானசம்பந்தர்6 துாண்டா விளக்கின் நற்சோதி முத்தாமுத்தி சங்கராபரணம்பழம் பஞ்சுரம் திருவாலங்காடு சுந்தரர்7 உருவமும் உயிருமாகி மற்றும்வானனை மதி சூடிய மைந்தனை மதுவந்தி(விருத்தம்) திருவண்ணாமலை அப்பர்8 நீலதாற்கரிய கேதாரகௌளைகாந்தார பஞ்சமம் கோயில் ஞானசம்பந்தர்9 ஆடிநாய்நறு நெய்யொடு பால் தயிர் கேதாரகௌளைகாந்தார பஞ்சமம் கோயில் ஞானசம்பந்தர்10 கடையவனே மோஹனம்முல்லைப்பண் திருவாசகம் 11 தென்னிலாமேனியாய் ஷண்முகப்ரியா 12 சிவனார் மனம் குளிர ராகமாலிகை திருப்புகழ் அருணகிரிநாதர்13 முருகாஎனஓதும் கானடா கந்தரலங்காரம் அருணகிரிநாதர்14 துள்ளுமத கானடா திருப்புகழ் அருணகிரிநாதர்ஓதுவார் பட்டியலில், இரண்டாவதாக பாடப்பட்ட, நடைமறுதிரிபுரம் பாடலை, இரண்டாவது காலத்திலும் பாடினார். பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை என்பதை, பாடுங்கால் ராகத்தின் ஸ்வரூபத்தை, விருத்தம் மூலம் உணர்த்திச் சென்றார். இந்தப் பாட்டில், கடம்பன் துறை என்ற ஸ்தலத்தின் பெயர் பாடலில் வந்தது. உருவமும் உயிருமாகி மற்றும் வானனை மதி சூடிய என்பன, வழக்கமாகக் கீரவாணி ராகத்தில் பாடுவர். இதை ஓதுவார் மதுவந்தி ராகத்தில் அமைத்துப் பாடியது, ஒரு மாறுதலாகவும், நன்றாகவும் இருந்தது. இவ்விடத்தில், மதுவந்திக்காகவும், முன்னர் வந்த பூர்விகல்யாணி மற்றும் சங்கராபரண ராகங்களுக்கும், வயலினிழைத்த தியாகராஜன், ரத்தினச் சுருக்கமான ஆலாபனைகளை அளித்தார்.ஒன்றை கவனித்தோம். துள்ளுமத வேட்கை ஹம்சாநந்தி ராகம் என்றில்லாமல், கானடா ராகத்தில் ஒரு துள்ளல் நடையுடன் பாடப்பட்டது. நிறைவாக வந்தது, உருவாய் அருவாய் அதையடுத்து, மங்களமாக, ஆறீரு தடந்தோள் வாழ்க!மிருதங்கத்தில், சிவகுமார் நடைப் போக்குகளை அளித்துக் கொண்டே வந்தது, பாடல்களின் ஸ்வாரசியத்தை அதிகப்படுத்தியது.எஸ். சிவகுமார் -தமிழ் இசை சங்கம், தன், 78ம் ஆண்டின் இசை விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது.இந்த முறை, இந்த சபாவும் இணையவழி மூலமாக, ரசிகர்களுக்கு கச்சேரிகளை கொண்டு சேர்க்கும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. வழக்கமான கச்சேரிகளையே, இங்கும், மறுபடியும் விமர்சனத்திற்கு உட்படுத்தாமல், நம் கவனத்தை சற்று மாற்றி, சங்கம் நடத்தும் திருமுறை இசை நிகழ்வுகளை பற்றிக் காண்போம். இங்கு, இரண்டாவது நாளன்று, முதல் நிகழ்வாக பண் இசைப் பேரறிஞர் குமாரசுவாமிநாத ஓதுவாரின் திருமுறை இசை அளிக்கப்பட்டது. மேலக்காவேரி தியாகராஜன் வயலின், திருவண்ணாமலை டி.எம்.சிவகுமார் மிருதங்கம், குமாரசுவாமிநாத தேசிகர் பாடிய பாடல்களும், அவற்றிற்கான திருத்தலங்களும், ராகங்களும், நிகர் பண்களும், அவற்றை அருளியவர்களும் கீழுள்ள பட்டியலின் வரிசைப்படி பாடப்பட்டன.