காரைக்கால் : திருநள்ளாறு கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அனுப்பிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் கடந்த 27ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு, ஆன்லைனின் முன்பதிவு செய்தவர்களை மட்டும் கோவில் நிர்வாகம் அனுமதித்தது. மேலும் கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதனால் குறைந்த பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்து சென்றதாக கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர் ஈஸ்வரமூர்த்தி திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, திருநள்ளாறை சேர்ந்த ராஜ்குமார்,35; சங்கர்,41; சுரேஷ்,36; ஆகியோரை கைது செய்தனர்.