திருவேற்காட்டை சேர்ந்த ஜோதி குமார் என்பவர், தன் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இவர், வளர்த்த வந்த பூனை கர்ப்பமடைந்தது.
பூனைக்கு வளைகாப்பு செய்ய ஜோதிகுமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, பூனையை அலங்காரம் செய்து நெற்றியில் பொட்டு வைத்து, நாற்காலியில் அமர வைத்தனர். பழங்கள், ஏழு விதமான உணவுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. பூனையின் இரு கால்களிலும் வரிசையாக வந்து, உறவினர்கள் வளையல்கள் அணிவித்தனர். உறவினர்கள், வீட்டின் மற்ற செல்ல பிராணிகளுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதன் படங்கள் வலைதளவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.