பதிவு செய்த நாள்
31
டிச
2020
02:12
திண்டுக்கல் : திண்டுக்கல் சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தர்கள் வழிபட்டனர். அபிராமி அம்மன் கோயில் உட்பட சிவன் கோயில்களில் நடராஜருக்கு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. ரோஜா, முல்லை, மல்லிகை, அரளி மலர்களால் அலங்கார அபிேஷகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சிவகாமி அம்மாள் நடராஜ பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து, சிறப்பு அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
பழநி: பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை ஆரூத்ரா தரிசனவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மன் பொன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதன்பின் நடராஜர், சிவகாமியம்மன், விநாயகர் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிரந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள பாலமுருகன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு 16 வகை திரவிய பொருட்களால் அபிஷேக வழிபாடுகள் நடந்தது.தாண்டிக்குடி:
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அண்ணாமலையார், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகன் ஆகியோருக்கு, திரவிய அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.பழநி: அடிவாரத்தில் உள்ள சட்டி சுவாமிகள் ஜீவ சமாதி மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாட்சி சிற்பரம் சித்தரிஷி தலைமையில் தமிழ் மந்திரங்கள் வாசித்து சிறப்பு யாகம், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ரவி, ஜோதிராமலிங்கம், வரதராஜன் குழுவினர் செய்தனர். பக்தர்கள் பங்கேற்று சைவ சமய நால்வருக்கு அபிேஷகம் செய்தனர்.