தியாகதுருகம் சீனிவாச பெருமாள் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2021 03:01
தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் உள்ள கோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தியாகதுருகம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் புத்தாண்டு தினமான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சந்தை மேட்டில் உள்ள நஞ்சுண்ட ஞானதேசிக சிவன் கோவிலில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. புக்குளம் கைலாசநாதர், முடியனூர் ஆதி அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், குடியநல்லூர், ஈய்யனூர், கணங்கூர் சிவன் கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.