பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில், ஸ்ரீ அகத்திய குருபூஜை விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி கோகுலம் கார்டன் செந்துார் அழகன் கோவிலில், ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆராதனை, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அகத்தியர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள், அகத்தியரை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும், சேவாலயம் அறக்கட்டளை சார்பில், ரமண மகரிஷி படம், அட்ஷர மண மாலை புத்தகம் மற்றும் விதை பந்துகளும் வழங்கப்பட்டன.