ஆனைமலை: சங்கடஹர சதுர்த்திக்காக, ஆனைமலை சுற்றுப்பகுதியிலுள்ள, விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆனைமலை அடுத்த கோட்டூர் மில் வீதி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்கடஹர சதுர்த்திக்காக விரதமிருந்த பக்தர்கள், பாராயணம் செய்து, விநாயகரை தரிசித்தனர். விநாயகருக்கு, விபூதி அலங்காரம், சிறப்பு பூஜைகள், செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.