சிற்றரசர்கள் தங்களை சக்கரவர்த்தியாக அறிவிக்க அஸ்வமேத யாகம் நடத்துவர். அதில் அரசரின் பட்டத்துக்குதிரை அவிழ்த்து விடப்பட்டு, அது மற்ற நாடுகளுக்கு சுதந்திரமாக சென்று திரும்ப வேண்டும். இதன் மூலம் அரசரை சக்கரவர்த்தியாகும் தகுதி பெறுவார். குதிரையை யாராவது தடுத்தால் அவரோடு போரிட்டு ஜெயித்த பின்னரே யாகம் நடத்தலாம். மன்னர் ஆட்சி கால நடைமுறை இது. தற்போது மக்களாட்சி நடப்பதால் யாகம் நடத்தும் வழக்கமில்லை.