கோவை : ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில் கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஸ்ரீ நாகசாயி மந்திரில் நடந்த 78வது வருட தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.