ஸ்ரீகாஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகளின் 27வது ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2021 04:01
மதுரை : ஸ்ரீகாஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகளின் 27வது ஆராதனை விழா எஸ்.எஸ்.காலனி பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபத்தில் ஜன.,8 - 12 வரை நடக்கிறது.
ஜன.,8 மாலை 6:00 மணிக்கு ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜனின் மகா பெரியவரும் மாய கிருஷ்ணனும் சொற்பொழிவு நடக்கிறது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா பெரியவர் விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிேஷகம், மகன்யாசம், ேஹாமங்கள் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு செல்வி மீனாட்சி சீனிவாசனின் கர்நாடக இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு பிக்சாண்டார் கோயில் தியாகராஜன் பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.11ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஈரோடு ராஜாமணி பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம்,12ம் தேதி காலை 9:00 மணிக்கு நெல்லை ஆர்.வெங்கடேஸ்வரன் பாகவதர் குழுவினரின் ஹனுமத் பிரபாவம் நாம சங்கீர்த்தனம், மாலை 6:00 மணிக்கு எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜனின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு நடக்கிறது. மதுரை அனுஷம் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்துள்ளார்.