திண்டுக்கல்: பழநி தைப்பூச விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது:பழநி தைப்பூச விழா ஜன.22ல் துவங்கி ஜன.31 வரை நடக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 10 வயதுக்கு கீழ், 65 வயதுக்கு மேற்பட்டோர், தொடர் காய்ச்சல், சுவாச பிரச்னை, இதயநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.தரிசன வரிசையில் 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். ஒருவருக்கொருவர் தொடக்கூடாது. முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
சோப் கொண்டு பக்தர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் மாநில, மாவட்ட உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலைகளை தொடக்கூடாது. தேங்காய், பூ, பழம், பால் கொண்டு வரக்கூடாது. எச்சில் துப்பக்கூடாது. அங்கப்பிரதட்சணம், தரையில் விழுந்து வணங்குதல் கூடாது. உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு பின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அன்னதானம் செய்ய வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.