திண்டிவனம்; திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது.திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 34ம் ஆண்டு திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது.அதனையொட்டி, அரங்கநாதருக்கும், ஆண்டாள்பிராட்டிக்கும் நடந்த திருக்கல்யாணம் உற்சவத்தை பட்டாட்சியர்கள் ஸ்ரீதர், ரகுஸ்ரீதர் ஆகியோர் நடத்தினர். உபயதாரர் பழனி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.