உளுந்துார்பேட்டை; பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ சாரதா ஆசிரமம் சார்பில் உலக நன்மை வேண்டி சிறப்பு விளக்கு பூஜை நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ சாரதா ஆசிரமம் சார்பில் உலக நன்மை வேண்டியும், மக்கள் நோய் இல்லாமல் வாழ்வதற்காக சிறப்பு விளக்கு பூஜை நடந்தது.விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.