உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அபிதகுசாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் தைத்திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ அபிதகுசாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் தைத்திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. .