பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவிலுள்ள, நவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், தை, முதல்நாளையொட்டி, 41ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க காலை, 6:20 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதரராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ குழுவினர் செய்திருந்தனர்.