திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2021 10:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.நேற்று காலை சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. திருவிழா நாட்களில் அம்மனும், சுவாமியும் தினமும் பல்வகை வாகனங்களில் வீதி உலா வருவர்.கொரோனா தடை உத்தரவால் இந்தாண்டு சுவாமி கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை வலம் செல்வார். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி செய்து வருகிறார்.