ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவங்கள் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2021 10:01
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்ஸவம், முத்துக்குறி வைபவத்துடன் நிறைவு பெற்றது.கோயிலில் டிசம்பர் 15 முதல் ராப்பத்து,பகல்பத்து, சொர்க்கவாசல் திறப்பு, எண்ணைக்காப்பு உற்ஸவங்கள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மணவாளமாமுனிகள் சன்னிதியில் மங்களாசாசனம் வைபவம் நடந்தது. நேற்று மாலை வடபத்ரசயனர்கோயிலில் கணு உற்ஸவம் நடந்தது. இதில் ஆண்டாளுக்கு கைத்தறி சேலை சாற்றிசிறப்பு வழிபாடு, இரவு முத்துக்குறி வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்றுடன் மார்கழி மாத உற்ஸவங்கள் முடிந்தது.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன்,கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.