பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி, கனுப்பாரி உற்ஸவ விழா நடந்தது.மாட்டுப்பொங்கல் திருநாளில் கிருஷ்ணர்அவதாரத்தில் கண்ணன் மாடுகளை மேய்த்து, பராமரித்து வந்ததை நினைவுகூரும் விதமாககனுப்பாரி விழா ஆண்டுதோறும் நடந்தது. பெருமாள் கால்நடைகளை பராமரிக்கும் விதத்தில் குதிரை மீது ஏறி வீதியுலா வருவார்.காலை 10:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, புஷ்ப சப்பரத்தில் வீதிவலம் வந்தார். மாலை 5:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.