ஆர்.கே.பேட்டை : பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், அத்தி வரதர் தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வணங்கினர். ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் சின்ன குளக்கரையில் அமைந்துள்ளது ஆத்மலிங்கேஸ்வரர் கோவில். பொங்கல் பண்டிகையை ஒட்டி, பக்தர்களின் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. பக்தர்களின் கோரிக்கையின் பேரில், காஞ்சிபுரம் அத்தி வரதர் போல், புதிய சிலை வடிவமைக்கப்பட்டு, கோவிலில் நிர்மாணம் செய்யப்பட்டது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்தி வரதரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.