பதிவு செய்த நாள்
18
ஜன
2021
10:01
கோபி: கோபி அருகே, பாரியூர் கொண்ட த்துக்காளியம்மன் கோவிலில், கடந்த, 7ல், குண்டம் விழா நடந்தது. இதையடுத்து, 9ல் பாரியூரில் இருந்து, கோபிக்கு மலர்ப்பல்லக்கில் அம்மன் விஜயம் செய்தார். கடந்த, 11ல், தெப்பத்தேர் உற்சவம் முடிந்தது. இதையடுத்து, கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையத்தில், மஞ்சள் நீர் உற்சவம் நேற்று முன்தினம் முடிந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு அம்மன் புறப்பாடு நடந்தது. செல்லும் வழியில் பதி என்ற இடத்தில் சிறப்பு பூஜை முடிந்து, கோவிலை அம்மன் அடைந்தார். பின், மறுபூஜை முடித்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் நேற்று காலை முதல், அம்மனை தரிசித்து சென்றனர். மறுபூஜையுடன் நடப்பாண்டு குண்டம் விழா நிறைவு பெற்றதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.