ராமநாதபுரம் : அழகன்குளத்தில் ஆண்டாள் சமேத சந்தானகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நேற்று முன்தினம் காலை வருடாபிேஷகம் மற்றும் ஹோமங்கள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு மேல் சுவாமிக்கும் ஆண்டாள் தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் அழகன்குளம் மற்றும் சுற்றுவட்டாரகிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.