வெள்ளி சிம்மாசனத்தில் மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2021 01:01
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தெப்பத்திருவிழா 4ம் நாளில் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைப்பூச நாளான ஜனவரி 28ம் தேதி வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.