பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் ஜன.,11 க்கு பின் நேற்று எண்ணப்பட்டது. பத்தே நாட்களில் ரூ. ஒரு கோடியே 68 லட்சத்து 73 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநியில் நாளை தைப்பூச கொடியேற்றம் நடக்க உள்ள நிலையில் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள், வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. 10 நாட்களுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 450, தங்கம்- 639 கிராம், வெள்ளி- 20 ஆயிரத்த 600 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் -43 கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் உதவி ஆணையர் செல்வி பங்கேற்றனர்.