பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.கன்னியக்கோவிலில் உள்ள மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி அம்மன் கோவிலில், மணவெளி தொகுதி என்.ஆர்.காங்., சார்பில், நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு அறங்காவல் குழு சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, என்.ஆர்.காங்., மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் செய்திருந்தார்.