சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் தங்கத்தேர் பவனி நடைபெற்றது.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் 916 நகரத்தார் குடும்பத்தினர் பங்கேற்ற செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று ஆண்டு தோறும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயில் முன் நகரத்தார் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவைத் தொடர்ந்து நேற்று கண்ணுடைய நாயகி கோயிலில் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.